உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புத்தகங்கள் மனித நேயத்தை அதிகப்படுத்தும் சிவகங்கை புத்தக கண்காட்சிக்கு மாணவர்கள் படையெடுப்பு 

புத்தகங்கள் மனித நேயத்தை அதிகப்படுத்தும் சிவகங்கை புத்தக கண்காட்சிக்கு மாணவர்கள் படையெடுப்பு 

சிவகங்கை : 'புத்தகங்கள் மனித நேயத்தை அதிகப்படுத்தும்'என்ற கவிஞரின் கூற்றுப்படி சிவகங்கையில் நடைபெறும் புத்தக கண்காட்சி மற்றும் திருவிழாவை காண இளைஞர்கள், குடும்ப தலைவிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.ஒருவர் தன் வாழ்வில் புத்தகங்களை வாங்க துவங்கி விட்டால், அவை வாழ்வின் ஆகச்சிறந்த நல் வரவாக மாறிவிடுகின்றன. புத்தகம் என்பது கருத்துக்களை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. உலக அறிவை பெறுவதற்கு நாம் பல்வேறு புத்தகங்களை வாசிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அனைவரும் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டும். அலைபேசிக்குள் முடங்கி கிடக்காமல் புத்தக திருவிழாக்களை நோக்கி இளம் பட்டாளம் படையெடுக்க துவங்கிவிட்டன. அதற்கு சிவகங்கை புத்தக திருவிழாவே சாட்சி.இக்கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், குடும்ப தலைவிகள் பலர் வந்து செல்கின்றனர். பொழுதை நன்கு கழிக்க விரும்பும் இவர்களால் நாளைய தலைமுறை மென்மேலும் முன்னேறும்.புத்தகங்கள் மனித நேயத்தை அதிகப்படுத்துவதாக, உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மனதை ஆழப்படுத்தி பக்குவத்தை தருவதால், மன அழுத்தத்திற்கும் சிறந்த மருந்தாக உள்ளது. இதன் மூலம் சமூக, கலாசார முன்னேற்றம், உயிர்களுக்கு மரியாதைசெய்யும் இயல்பு அதிகரிக்கிறது.கண்காட்சி நேரம்: சிவகங்கை மன்னர்மேல்நிலை பள்ளி மைதானத்தில் ஜன., 27 முதல் பிப்., 6 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு 110 ஸ்டால்களில் 10 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீததள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம். மாலை 6:00 மணிக்கு மேல் தினமும் சிறப்பு பேச்சாளர்கள் பேசுகின்றனர். பள்ளி, கல்லுாரிமாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். அறிவியல் இயக்கம் சார்பில் கோளரங்கம், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அளிக்கின்றனர். புத்தக கண்காட்சி ஏற்பாட்டை பபாசியுடன், மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலக துறைகள்இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை