உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதிய பஸ் பாஸ் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

புதிய பஸ் பாஸ் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடந்ததை ஒட்டி முன்னதாகவே, பள்ளிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க வேண்டிய நேரத்தில், அதிக வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி பலமுறை மாற்றப்பட்டது.தொடர்ந்து ஜூன் 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக பஸ் பாஸ் வழங்க முடியாத காரணத்தால் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் அல்லது பள்ளி அடையாள அட்டைகளை காண்பித்து அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்தது.ஆனால், காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து வரும் அரசு பஸ்களில் பள்ளி மாணவர்களை டிக்கெட் எடுக்க சொல்லி நடத்துனர்கள் வற்புறுத்துவதாகவும், டிக்கெட் எடுக்காத மாணவர்களை வழியில் இறக்கி விடுவதாகவும் பெற்றோர்கள் புகார் எழுப்புகின்றனர்.அரசின் அறிவிப்பு காற்றில் பறப்பதாக கூறுகின்றனர். எனவே மாணவர்களின் நிலையை அறிந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் புதிய பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்: அரசு பஸ்களில் மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் அல்லது அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம் என்ற சுற்றறிக்கை ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.அதன்பேரில் மாணவர்கள் இலவச பயணம் செய்கின்றனர். ஒரு சில இடங்களில், பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ