காட்சிப்பொருளான மின்கோபுர விளக்கு
காரைக்குடி; காரைக்குடி--மதுரை செல்லும் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை சந்திப்பில் உயர் மின் கோபுர விளக்கு பயன்பாடின்றி கிடப்பதால் தொடர் விபத்து நடந்து வருகிறது. குன்றக்குடி-மதுரை செல்லும், திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நான்கு வழிச் சாலை சந்திப்பு உள்ளது. சந்திப்பு என்பதால் அடிக்கடி விபத்து நடப்பதோடு உயிரிழப்பும் ஏற்படுகிறது. தொடர் விபத்து காரணமாக இங்கு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. விபத்தை தடுக்க உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த விளக்கு பயன்பாடு இன்றி காட்சி பொருளாக கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் இந்த சந்திப்பில் விபத்தில் சிக்குகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.