உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மாயம்

 சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மாயம்

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணி முடிந்த நிலையில், தாய்மார்கள் பாலுாட்டும் அறையை அகற்றிவிட்டு, கடை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக திருப்புத்துார், மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் கூரை அமைக்க எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் பிப்., 26 ம் தேதி பணிகள் துவங்கின. இந்த நிதியில் மதுரை, திருச்சி, திருப்புத்துார் பஸ்கள் நிற்கும் இடத்தில் தோரண வாயிலுடன் நிழற்குடை, சி.சி.டி.வி., கேமரா, டிஜிட்டல் போர்டு வைக்கும் பணிகள் முடிந்து திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பாலுாட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டது. தற்போது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி முடிந்த நிலையில், பாலுாட்டும் அறையை அகற்றி விட்டனர். இதனால் தாய்மார்கள் பெரிதும் சிரமம் அடைந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை