உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சரக்கு லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

சரக்கு லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

மானாமதுரை: மானாமதுரை நகருக்குள் மெயின் பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட்,அண்ணாத்துரை சிலை, தேவர் சிலை, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு மதுரையிலிருந்து சரக்கு லாரிகள் மூலம் சரக்குகள் கொண்டு வந்து தினந்தோறும் கடைகளில் இறக்கப்படுகிறது.லாரிகளில் கொண்டு வரப்படும் பொருட்களை கடைகளில் இறக்குவதற்காக லாரிகளை மெயின் ரோட்டில் நிறுத்தி இறக்குவதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வாகன ஓட்டிகள் கூறுகையில், மானாமதுரையில் அனைத்து ரோடுகளிலும் காலை மற்றும் மாலை போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் சரக்கு வாகனங்களை ரோட்டில் நிறுத்தி கடைகளுக்கு சரக்குகளை இறக்குவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விபத்து அபாயமும் உள்ளது. ஆகவே டிராபிக் போலீசார் காலை மற்றும் மாலை போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் சரக்கு லாரிகளை நகருக்குள் அனுமதிக்காமல் போக்குவரத்து குறைவாக உள்ள நேரங்களில் லாரிகளை அனுமதித்து சரக்குகளை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி