2100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் இருவர் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் போலீசார் வாகன சோதனையில் 2100 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி இருவரை கைது செய்தனர். சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் நேற்று இளையான்குடி பகுதியில் ரோந்து சென்றனர். மறவமங்கலம் சூராணம் ரோட்டில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 42 மூடைகளில் 2100 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை உறுதி செய்தனர். வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பாலாஜி மற்றும் முனியாண்டி மகன் வேலுவை கைது செய்தனர்.