உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சித்திரை திருவிழாவிற்கு சுத்தமாகுது வைகை ஆறு

சித்திரை திருவிழாவிற்கு சுத்தமாகுது வைகை ஆறு

மானாமதுரை : மானாமதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்காக வைகை ஆற்றினை ரூ.8 லட்சத்தில் சுத்தம் செய்யும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.மானாமதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ஆனந்தவல்லி சோமநாதர், வீர அழகர் கோயில்களில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். விழாவின் போது வைகை ஆற்றுக்குள் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் விளையாட்டும் நடைபெறும். இந்த ஆண்டு விழா ஏப்.14ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதற்காக நகராட்சி சார்பில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் மற்றும் வீர அழகர் கோயில் எதிரே உள்ள வைகை ஆற்று பகுதிகளை ரூ.8 லட்சத்தில் நகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் வைகை ஆற்றிற்குள் குடிநீர், மின்விளக்கு, கழிப்பிட வசதிகளை செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை