உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வளர்ச்சிப்பணி தகவல் இல்லை துணை தலைவர் குற்றச்சாட்டு

வளர்ச்சிப்பணி தகவல் இல்லை துணை தலைவர் குற்றச்சாட்டு

எஸ்.புதுார்: எஸ்.புதுாரில் நிறைவேற்றப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என ஒன்றியக்குழு துணை தலைவர் குற்றம் சாட்டினார்.எஸ்.புதுார் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் விஜயா குமரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், லெட்சுமண ராஜூ முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வீரம்மாள் பேசும்போது, கவுன்சிலர்களுக்கு வார்டில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து விவரங்களை தெரிவிப்பதில்லை, கவுன்சிலர்கள் வலியுறுத்தும் பணிகளை தேர்வு செய்வதில்லை என குற்றம் சாட்டினார்.இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமண ராஜு, கவுன்சிலர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படும் அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். கூட்டத்தில் பங்கேற்ற வனவர் சக்திவேல், காட்டு மாடுகள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வழிமுறை காணப்படும் என்றும் அதுவரை விவசாயிகளுக்கு காட்டு மாடுகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற உரிய ஆலோசனை கூறப்படும் என்றார்.கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், ரேவதி, விஜயா, ராஜாத்தி, இந்திராகாந்தி, சின்னம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை