உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாக்காளர் தின விழிப்புணர்வு

வாக்காளர் தின விழிப்புணர்வு

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நகராட்சி சேர்மன் முத்துத்துரை, துணை சேர்மன் குணசேகரன், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீவித்யா கிரி மெட்ரிக் பள்ளியில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திட மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இதில் மாணவர்கள் வாக்களிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியை வித்யாகிரி கல்வி நிறுவன தாளாளர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். முதல்வர் குமார், ஆசிரியர்கள் சிவபாக்கியம் அனுராதா அழகம்மை வடிவுக்கரசு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்