மேலும் செய்திகள்
போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு
06-Dec-2025
விசாரணைக்கு சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
05-Dec-2025
ஒரு கிலோ மல்லிகை ரூ.7,500க்கு விற்பனை
30-Nov-2025
தென்காசி:தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர்.தென்காசி மாவட்டம், செங்கோட்டை பிரானுார் பார்டர் பகுதியில், 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. ஏற்கனவே மக்கள் போராட்டம் நடத்தினர். நேற்று முன் தினம், தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கோட்டை அருகே கீழப்புதுார் பேரூராட்சி பகுதியிலும் குடிநீர் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து தென்காசி -- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், பெண்கள் காலி குடங்களுடன் மறியல் நடத்தினர்.
06-Dec-2025
05-Dec-2025
30-Nov-2025