மேலும் செய்திகள்
போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு
06-Dec-2025
விசாரணைக்கு சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
05-Dec-2025
தென்காசி:தென்காசியில் தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: தென்காசிக்கு அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்ய வரும் போது அவருடன் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. அவற்றை பறக்கும் படையினர் ஏன் சோதனை செய்யவில்லை. தென்காசியில் தாமரை மலர போகிறது என்ற உளவுத்துறையின் தகவலால் ஏற்பட்ட அச்சத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 5 ஆயிரம் பணம் கொடுக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.புளியங்குடியில் ராஜா எம்.எல்.ஏ., காரை சோதனை செய்யாமல் அனுப்பிய தேர்தல் அலுவலரை பணி நீக்கம் செய்த தேர்தல் கமிஷன் இப்போது ஏன் மவுனம் காக்கிறது. தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உதயநிதி பிரசாரத்திற்கு தேர்தல் விதிமுறைகளை மீறி 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட கொடி கம்பங்கள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையான புகார் அளித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க.,வின் விதிமீறல்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றார்.
06-Dec-2025
05-Dec-2025