| ADDED : ஜூலை 10, 2024 11:17 PM
தென்காசி:சங்கரன்கோவில் பகுதியில் தங்க பிஸ்கட் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த அக்காள், தம்பி கைது செய்யப்பட்டனர்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லுார் பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் வந்து, டீக்கடை நடத்தி வரும் ஒரு பெண்ணிடம் பல லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் எனக்கூறி கொடுத்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பெற்று சென்றனர். தங்க பிஸ்கட்டை சோதித்துப் பார்த்தபோது போலி என தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தார். கரிவலம்வந்தநல்லுார் போலீசார் 'சிசிடிவி' காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு சங்கரன்கோவிலில் சுற்றித்திரிந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ரவண லட்சுமி, 55, அவரது தம்பி சீனு, 48 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பல இடங்களில் இதே போல மோசடி ஈடுபட்டிருப்பதும் இதற்காக கைதாகி சிறை சென்றிருப்பதும் தெரிய வந்தது.