உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / குற்றாலம் பகுதியில் சாரல் அருவியில் கூட்டம் குறைவு

குற்றாலம் பகுதியில் சாரல் அருவியில் கூட்டம் குறைவு

குற்றாலம்:குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்தது. சுற்றுலா பயணியர் கூட்டம் குறைவாகவே இருந்தது.தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனிடையில் நேற்றும் காலை முதலே சாரல் மழை அவ்வப்போது பெய்தது.குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, புலியருவி, பழையக்குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பரவலாக விழுந்தது.இருப்பினும் சுற்றுலா பயணியர் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் நெரிசல் இன்றி சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் குளுமையான நிலை காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !