உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / நாய் குறுக்கே புகுந்து விபத்து டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

நாய் குறுக்கே புகுந்து விபத்து டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

திருநெல்வேலி : தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது, 53; வெளிநாட்டில் டிரைவராக பணிபுரிந்தார். இவரது உறவினர் முஹமது திவான், 48. இவரும் வெளிநாட்டில் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்தார்.இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். ஷாகுல் ஹமீது கண் சிகிச்சைக்காக திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை டூ - வீலரில் சென்றார். அவருடன் முகமது திவானும் உடன் சென்றார். சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலையில் ராமையன்பட்டி அருகே சென்றபோது, குறுக்கே ஓடிய நாய் மீது மோதி, நிலை தடுமாறி டூ - வீலரில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.இதில், ஷாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே இறந்தார். முகமது திவான் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இருவருக்கும் மனைவி, குழந்தைகள் உள்ளனர். மானுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை