| ADDED : நவ 23, 2025 02:19 AM
தென்காசி: தென்காசி அருகே லாரி மோதியதில், 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன. தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் அருகே கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை, விஸ்வநாதப்பேரியை சேர்ந்த பேச்சியப்பனுக்கு சொந்தமான மாடுகள், மேய்ச்சலுக்காக வயலுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. அப்போது மாடுகள், திருமங்கலம் - -செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றன. அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த சேம்பர் லாரி, மாடுகள் மீது மோதியதில், 10 மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. 10-க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்தன. வாசுதேவநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.