உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  பயணியை செருப்பால் அடித்த அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்கு

 பயணியை செருப்பால் அடித்த அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்கு

தென்காசி: கடையநல்லுார் அருகே டிக்கெட் எடுத்த நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் தகராறு செய்த கண்டக்டர் பயணியை செருப்பாலும் கம்பியாலும் தாக்கினார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தென்காசி, கடையநல்லுார் அருகே நயினாரகரத்தை சேர்ந்தவர் சுப்பையா 50. கூலி தொழிலாளி. நவ.,17 மாலை 4:00 மணிக்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். நயினாரகத்திற்கு ரூ.10 கொடுத்து டிக்கெட் எடுத்தார். ஆனால் பஸ் நயினாரகரத்தில் நிற்காமல் அடுத்த ஸ்டாப்பான இடைகாலில் நின்றது. இது குறித்து சுப்பையா, கண்டக்டர் நாகேந்திரனிடம் கேட்டார். கண்டக்டர் ஆத்திரத்தில் அவரை இடைகால் ஸ்டாப்பில் பஸ்சிலிருந்து கீழே தள்ளினார். பஸ்சில் கிடந்த கம்பியால் அவரை முதுகில் சரமாரியாக தாக்கினார். காயமுற்ற சுப்பையா பஸ் முன்பாக உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரமுற்ற கண்டக்டர் அங்கு தரையில் கிடந்த செருப்பை எடுத்து சுப்பையாவை கன்னத்தில் தாக்கினார். பின்னர் பஸ்சை கிளப்பி சென்றனர். சம்பவம் குறித்து சுப்பையா, தாக்கப்பட்ட சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொடுத்து புகார் செய்தார். இலத்துார் போலீசார் மதுரை டிப்போ அரசு பஸ் டி.என் 58 என் 2271- கண்டக்டர் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை