உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  இரிடியம் மோசடியில் கோவை நபர் கைது

 இரிடியம் மோசடியில் கோவை நபர் கைது

தென்காசி: தென்காசி குத்துக்கல்வலசை பாரதிநகரை சேர்ந்த ஹரிஹர சுப்பிரமணியன் மனைவி விஜயலட்சுமி 50. இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு இருந்த சுப்புராஜ் மனைவி ஜெயகுரு இரிடியம் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு கோடி கிடைக்கும் என கூறி சிறிது சிறிதாக மொத்தம் ரூ.36 லட்சம் பணம் பெற்றனர். இந்த சம்பவத்தில் ஜெயகுரு, கோவை ஆனைமலையை சேர்ந்த சிவராமன், திருப்பூர் ராணி, குடுமியான்மலை ரவிச்சந்திரன், காட்பாடி ஜெயராஜ், சுவாமிநாதன் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் திருப்பூர் பெருமாநல்லுாரில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். புகாரின் பேரில் தென்காசி சி.பி.சி.ஐ.டி., போலீசார் திருப்பூர் ராணியை சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். ஆனைமலை சிவராமன் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி