உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / வனப்பகுதியில் யானை இறப்பு

வனப்பகுதியில் யானை இறப்பு

தென்காசி:தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் மேற்கு தொடர்ச்சி மலை செல்லுபுளி பீட் பகுதியில், 4 வயது ஆண் யானை இறந்து கிடந்தது. வன கால்நடை மருத்துவர் மனோகரன், புளியங்குடி வன அலுவலர் சுரேஷ், மாவட்ட வன அலுவலர் முருகன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.அங்கேயே உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. நோய் வாய்ப்பட்டு யானை இறந்ததா, வேறு காரணங்கள் உள்ளனவா என்பது உடற்கூறாய்வு முடிவுக்குப் பின்னரே தெரிய வரும் என வனத்துறையினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ