உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / முன்னாள் விமானப்படை அதிகாரி கைதாகி ஒரே நாளில் விடுவிப்பு

முன்னாள் விமானப்படை அதிகாரி கைதாகி ஒரே நாளில் விடுவிப்பு

தென்காசி:பொட்டல்புதூர் வழிபாட்டு தலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் விமானப்படை அதிகாரி கைதாகி ஒரே நாளில் விடுவிக்கப்பட்டார்.தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பொட்டல்புதூரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சென்னையை சேர்ந்த அதிகாரி சீனிவாச சுப்ரமணியன் 54, என்பவர் சமூக வலைத்தளத்தில் வந்த பொட்டல்புதூர் பள்ளிவாசல் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு எந்த தெய்வம் குடியிருந்த கோயிலோ... இடம் - தென்காசி என பதிவிட்டு இருந்தார்.இது குறித்து பள்ளிவாசலின் நிர்வாகி அசன் முகைதீன் 42, என்பவர் 400 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் குறித்து வீடியோ பதிவிடுவதன் மூலம் சமூகங்களுக்கிடையே பகைமையை வளர்க்கும். ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் என புகார் அளித்திருந்தார்.தென்காசி சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சீனிவாச சுப்பிரமணியனை கைது செய்து திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று அவருக்கு ஜாமின் கிடைத்தது. நேற்று மாலை அவர் விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை