மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்: தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஐம்பொன் சிலை கடத்திச் செல்லப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., தினகரன், எஸ்.பி., சிவகுமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருச்சி, தஞ்சாவூர் போலீசார் சில நாட்களாக தஞ்சாவூர் - திருச்சி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, தஞ்சாவூர் மாவட்டம், திருவிழாப்பட்டியில், சந்தேகத்திற்கிடமாக நின்ற காரையும், இரண்டு பைக்குகளையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, காரில் மறைத்துக்கொண்டு வரப்பட்ட, 2.5 அடி உயர ஐம்பொன் பெருமாள் சிலையை போலீசார் கைப்பற்றினர். காரில் இருந்த சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், 52, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே அலமங்குறிச்சியைச் சேர்ந்த ராஜ்குமார், 36, திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த தினேஷ், 28. ஜெய்சங்கர், 58, கடலுார் மாவட்டம், நாட்டார்மங்கலம் விஜய், 28, மற்றும் டூ - வீலரில் வந்த திருவிடைமருதுார் ஹாரிஸ், 26, கண்டமங்கலம் அஜித்குமார், 26, உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: தினேஷின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன், தொழுவூர் பகுதி ஆற்றில் துார்வாரும் போது இந்த சிலை கிடைத்துஉள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் தகவல் அளிக்காமல், தன் வீட்டில் வைத்து வழிபட்டு வந்துள்ளார்.தினேஷ் உறவினரான தனியார் வங்கியில் பணியாற்றிய ராஜ்குமார் திட்டப்படி, தன் நண்பரான சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் உதவியுடன் சிலையை 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, ஏழு பேரையும், நேற்று முன்தினம் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.இந்த சிலை 15 - 16ம் நுாற்றாண்டு சோழர்கள் காலத்தைச் சேர்ந்தது என, உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சிலை வேறு எந்த கோவிலிலும் திருடப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025