மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ
19-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில், 2020ம் ஆண்டு, 40 கி.மீ.,க்கு, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியை, 2025ம் ஆண்டுக்குள் முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியில், பழைய சாலையை பெயர்த்து அகற்றாமல், அதன் மேலேயே அரை அடி உயரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதனால், சாலையின் இரண்டு புறங்களில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்களின் வாசலுக்கு மேல், சாலை உயர்ந்து காணப்படுகிறது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:'தமிழகத்தில் புதிய சாலைகள் அமைப்பதற்கு முன், பழைய சாலையை முழுமையாக பெயர்த்து அகற்றி எடுக்க வேண்டும். அதன்பின், அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும். இதை மீறிச் செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 2021ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.ஆனால், கும்பகோணம் பகுதிகளில் அமைக்கப்படும் சாலை பணியில், பழைய தார் சாலைகளைப் பெயர்த்து அகற்றாமல் புதிய சாலைகளை அமைத்து வருகின்றனர். இதனால் சாலை மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால், மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் சென்று விடுகிறது.இவ்வாறு கூறினர்.
கும்பகோணம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் அலுவலகம் முன் மரங்கள் உள்ளன. ஆனால் மரத்தின் வேருக்கு தண்ணீர் செல்லமுடியாத அளவுக்கு அறிவாளித்தனமாக, மரத்தை சுற்றி தார் ஊற்றி சாலை அமைத்துள்ளனர். இதைப் பார்த்து செல்லும் மக்கள் பலரும், 'மரங்கள் இன்னும் சில நாட்களில் பட்டு விடும். இப்படித்தான் இவர்கள் வேலை எல்லாம்' என, வேதனையுடன் கடந்து சென்றனர்.
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025
19-Sep-2025