மேலும் செய்திகள்
ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
02-Dec-2025
நிச்சயதார்த்தத்தை மறைத்த காதலியை கொன்ற காதலன்
27-Nov-2025
போலி நகைகளை அடகு வைத்தவர் கைது
27-Nov-2025
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், 15 நாட்களுக்கு முன் போடப்பட்ட தார் சாலை, 20 அடி அகலம் உள்வாங்கியதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, ஸ்ரீ நகர் காலனி, செந்தில்நாதன் நகர் சந்திப்பில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்தது. அதன்பின், சாலை சீரமைக்கும் பணிகள் முடிந்து, 15 நாட்களுக்கு முன் தார் ஊற்றப்பட்டது. முறையாக சாலையை சீரமைக்காததால், பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, சிறிய பள்ளம் உருவானது. அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் அளித்தனர். அதிகாரிகள் அலட்சியமாக இருந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு, 20 அடி அகலம், 3 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த, கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் சாலையை சுற்றி தடுப்புகளை அமைத்தனர். சாலையை சீரமைக்க கோரி, த.வெ.க.,சார்பில், மாவட்ட செயலர் வினோத் ரவி, மாநகர செயலர் முருகனாந்தம் ஆகியோர் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜனிடம் மனு அளித்தனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மாநகராட்சி நிர்வாகம் இதற்கு முறையான தீர்வு காண வேண்டும்' என்றனர்.
02-Dec-2025
27-Nov-2025
27-Nov-2025