மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பெரியக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பவ்யா, 24, சர்வேயர்.மார்ச் 2ல், சோழகன்குடிக்காடைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் தங்கை ஜோதியின் இடத்தை அளவீடு செய்ய சென்றார். அப்போது முருகானந்தம், அவரது மனைவி செல்வகுமாரி, தங்கை ஜோதி, அவரது கணவர் சுபாஷ் ஆகியோர், அளவீடு பணியை வீடியோ எடுத்தனர்.அதை தடுத்த பவ்யாவை, முருகானந்தம் தகாத வார்த்தைகளால் பேசி, 'கொலை செய்து விடுவேன்' என மிரட்டி, தாக்கினார். இதை தடுக்க சென்ற வி.ஏ.ஓ., மாரியம்மாளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. சர்வேயர் பவ்யா, போலீசில் புகார் அளித்தார்.எனினும், மதுக்கூர் போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, சர்வேயர் பவ்யா மீது தாக்குதல் நடத்திய முருகானந்தத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரி, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடந்தது.மாநில நில அளவை அலுவலர்கள் மாவட்ட செயலர் பாரதிராஜா, மாவட்ட தலைவர் தானியல் மார்ஸ் தலைமையில், ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வேயர்கள், வருவாய்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால், நேற்று சர்வே பணிகள் பாதிக்கப்பட்டன.
15-Dec-2025
15-Dec-2025