உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  எஸ்.ஐ.ஆர்., பணியாளர் தற்கொலைக்கு முயற்சி

 எஸ்.ஐ.ஆர்., பணியாளர் தற்கொலைக்கு முயற்சி

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கொற்கையை சேர்ந்தவர் சித்ரா, 59; அங்கன்வாடி ஊழியர். சித்ராவிடம் நேற்று முன்தினம், கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் கடுமையாக பேசியுள்ளார். 'ஒரே நாளில், 200 எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுப்பேன்' என கூறியுள்ளார். இதில் மனமுடைந்த சித்ரா, நேற்று காலை வீட்டில் இருந்த, 84 துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும், கடிதத்தில், 'என்னால் பணிச் சுமையை தாங்க முடியவில்லை. மாநகராட்சி கமிஷனர் தரக்குறைவாக பேசினார். என் முடிவுக்கு இந்த நிர்வாகமே பொறுப்பு' என, எழுதி உள்ளார். தற்போது, சித்ரா கும்பகோணம் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தரக்குறைவாக பேசிய கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில், ''நான் யாரையும் அவமதித்து பேசவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை