உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பள்ளி செல்ல பஸ் கேட்டு மாணவர்கள் போராட்டம்

பள்ளி செல்ல பஸ் கேட்டு மாணவர்கள் போராட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு பாலத்தளி வழியாக, இரண்டு அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேராவூரணியில் காலை, 7:30 மணிக்கு புறப்படும் அரசு பஸ், பாலத்தளி கிராமத்திற்கு, 8:00 மணிக்கு வருகிறது. ஆனால், பேராவூரணி பகுதிகளில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்வதால், பேராவூரணி அதன் சுற்று வட்டார பயணியர், பள்ளி மாணவ -- மாணவியர், அதிக அளவில் ஏறி விடுகின்றனர். இந்நிலையில் பாலத்தளி, பில்லங்குழி, துர்கா நகர், துவரமடை ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பஸ்சில் போதிய இடம் இல்லாமலும், பஸ்சில் ஏற முடியாமல், படிகளில் தொங்கியவாறு பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.இதனால், கூடுதலாக பஸ் இயக்க வலியுறுத்தி, நேற்று காலை, பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் முன், பாலத்தளி பள்ளி மாணவியர், கிராம மக்கள் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டக்டரின் மொபைல் போன் வாயிலாக, போக்குவரத்து அதிகாரிகள், மாணவர்களிடம் பேசி, ஒரு வாரத்தில் கூடுதலாக பஸ் இயக்க உறுதியளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை