உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  சுற்றுச்சுவரில் பைக் மோதி; இரு சிறுவர்கள் உயிரிழப்பு

 சுற்றுச்சுவரில் பைக் மோதி; இரு சிறுவர்கள் உயிரிழப்பு

தஞ்சாவூர்: வீட்டு சுற்றுச்சுவரில் பைக் மோதிய விபத்தில் இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். தஞ்சாவூர் அருகே கடகடப்பை, வடக்கு தெருவை சேர்ந்தவர் அமிதாபச்சன். இவரது மகன் சந்தோஷ், 17; கூலி தொழிலாளி. இவரது நண்பர் பாபநாசம் அடுத்த வேப்பங்குளம் கோவில் தெருவை சேர்ந்த மோகன். இவரது மகன் திரிசேக், 17; திருச்சியில் தனியார் கல்லுாரி மாணவர். இருவரும், திருச்சி மாவட்டம், லால்குடி சென்று விட்டு, மீண்டும், லால்குடியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மாதா கோவில் வழியாக நேற்று முன்தினம் இரவு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக பைக்கில் வந்த நிலையில், திருக்காட்டுப்பள்ளி பிரதான சாலை வளைவில் திரும்ப முயன்றபோது, நிலை தடுமாறி லுார்துராஜ் என்பவரின் வீட்டு சுற்றுச்சுவரில் பைக் மோதியது. இதில், இருவரும் வீட்டின் அருகே புதரில் துாக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து இறந்தனர். நேற்று காலை அவ்வழியாக வயலுக்கு சென்றவர்கள், கேட்பாரற்று உயிரிழந்து கிடந்த சந்தோஷ், திரிசேக் இருவரையும் பார்த்துவிட்டு, திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, திருக்காட்டுப்பள்ளி போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை