உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மூணாறு : மூணாறு அருகே சூரியநல்லியை சேர்ந்தவர் ராஜன்(33). இவரது மனைவி ராமேஸ்வரி(28). இவர் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி,ராஜன் அடித்து துன்புறுத்தி வந்தார். இதில் காயம் அடைந்த ராமேஸ்வரி சாந்தாம்பாறை போலீசில் புகார் அளித்து விட்டு,மறையூர் அருகே பள்ளநாட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 2008 பிப்ரவரி 8ல், மனைவியை அழைத்து வர ராஜன் பள்ளநாட்டிற்கு சென்றார். அங்கு இரவில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு, மூணாறுக்கு வந்த ராஜனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடுபுழா மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜீனன்,ராஜனுக்கு ஆயுள் தண்டனையும்,5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ