உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழையில் சேதமடைந்த வீடுகளில் கலெக்டர் ஆய்வு

மழையில் சேதமடைந்த வீடுகளில் கலெக்டர் ஆய்வு

மூணாறு: இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே இடவெட்டி ஊராட்சியில் மீன்முட்டி, சாஸ்தாம்பாறை, ஆசாரிபரம்பு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.அதில் நான்கு வீடுகளின் மேல் கூரை, மரம் விழுந்து இரண்டு வீடுகள் ஆகியவை சேதமடைந்தன. அவற்றை இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் நேற்று பார்வையிட்டார். இடவெட்டி ஊராட்சி தலைவர் பின்சிமார்ட்டின், தொடுபுழா தாசில்தார் பிஜிமோள், காரிகோடு கிராம அலுவலர் ஷாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.அப்போது கலெக்டர் கூறியதாவது., சேதமடைந்த வீடுகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.சேதங்களை கணக்கிடுவதற்கு ஊராட்சி உதவி பொறியாளர், காரிகோடு கிராம அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ