உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டிற்கு தீ வைத்தவர் மீது வழக்கு

வீட்டிற்கு தீ வைத்தவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, : முன் விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைத்தவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து தேடுகின்றனர்.தேவதானப்பட்டி அருகே ஜி. கல்லுப்பட்டி ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் முத்தம்மாள் 40. அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் 42. முத்தம்மாளுக்கு பெருமாள் பிரபு என்ற மகனும் , இரு மகள்களும் உள்ளனர். பெருமாள்பிரபுவுக்கும், முருகவேல் மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்னையால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு இருந்தது.இதனால் பெருமாள்பிரபு வெளி மாநிலத்திற்கு வேலைக்கு சென்றார். முத்தம்மாளும், இரு மகள்களும் மதுரை பாண்டி கோயிலுக்கு சென்றனர். அப்போது முன் விரோதம் காரணமாக முருகவேல், முத்தம்மாள் வீட்டின் கூரையை பிரித்து, வீட்டிற்குள் தீ வைத்துவிட்டு அதே வழியில் வெளியேறினார்.அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்தனர். இதில் பீரோவில் இருந்த ஆடைகள், ஆதார் கார்டு எரிந்தது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., முருகேசன், முருகவேலை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை