உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதல்போக சாகுபடிக்கு நெல் வயல்கள் தயார்

முதல்போக சாகுபடிக்கு நெல் வயல்கள் தயார்

கம்பம்: கம்பம் பள்ளத்தாத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு நாற்றுகள் வளர்ந்து வரும் நிலையில், நடவு செய்வதற்கு வசதியாக நெல் வயல்களை தயார் செய்கின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப்பெரியாறு பாசனத்தில் மேற்கொள்ளப்படும் இதில் முதல் போக பணிகள் தற்போது துவங்கி உள்ளது. நாற்றுகள் வளர்க்க ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நாற்றுகள் 25 நாட்கள் வளர்ந்தவுடன் பறித்து நடவு செய்வார்கள். தற்போது கம்பம், சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றுகள் வளர்ந்த நிலையில் உள்ளது.வயல்களை நடவு செய்ய ஏதுவாக டிராக்டர்களால் உழவு செய்து வருகின்றனர்.உழவு முடிந்தவுடன் நடவு பணிகள் துவங்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே குச்சனூர், மார்க்கையன்கோட்டை போன்ற பகுதிகளில் நடவு பணிகள் துவங்கி நடைபெற்றுவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை