உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.19 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால் அமைக்க ஏற்பாடு

ரூ.19 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால் அமைக்க ஏற்பாடு

ஆண்டிபட்டி : டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சீதாராம்தாஸ் நகர் செல்வ விநாயகர் தெருவில் இருபுறமும் ரூ.19 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால் அமைக்கப்படும் என்று ஊராட்சிதலைவர் வேல்மணி தெரிவித்தார். அவர் கூறியதாவது:இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தெருவில் இருபுறமும் கழிவுநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடும் உள்ளது.தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் புதிய பணிகளை துவக்க முடியவில்லை. வரும் ஜூன் மாதத்தில் பணிகளை துவக்கி விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறுதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை