உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் நடந்த நீட் தேர்வில் 181 மாணவர்கள் பங்கேற்பு

தேனியில் நடந்த நீட் தேர்வில் 181 மாணவர்கள் பங்கேற்பு

தேனி : தேனியில் நடந்த நீட் தேர்வில் 181 மாணவர்கள் தேர்வு எழுதினர்.இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. நேற்று தேனி முத்துத்தேவன்பட்டி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நீட் தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்க 135 மாணவிகள், 57 மாணவர்கள் என 192 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மையத்தில் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்வு எழுத வந்திருந்தனர். நுழைவாயிலில் மாணவர்களின் உடைகள் பரிசோதனை, ஹால் டிக்கெட், புகைப்படம் சரிபார்க்கப்பட்டு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே மாணவர்களிடம் பயோ மெட்ரிக் முறையில் ஹால்டிக்கெட் சரிபார்க்கப்பட்டு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் 181 மாணவர்கள் பங்கேற்றனர். காலை 11:30 முதல் மதியம் 1:30 மணி வரை மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ