| ADDED : ஜூலை 22, 2024 07:25 AM
தேனி: மாவட்டத்தில் இரு மையங்களில் நடந்த இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் 661 பேர் பங்கேற்றனர். தேர்வு அறைகள், வளாகங்களில் 84 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 1768 இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கூடுதலாக ஆயிரம் காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இப்பணிக்கான தேர்வு நேற்று நடந்தது. தேனியில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிரசன்டேஷன் கான்வென்ட் ஆகிய இரு பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட்டன. இரு மையங்களிலும் 704 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேர்வு 36 அறைகளில் நடந்தது. ஒவ்வொரு அறையிலும் இரு கேமராக்கள், தேர்வு மைய வளாகத்தில் கேமராக்கள் என 84 கேமராக்கள் பொருத்தி தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன. தேர்வினை 661 பேர் எழுதினர், 43 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு மையங்களை கலெக்டர் ஷஜீவனா, பாரத எழுத்தறிவு இயக்கத்தின் திட்ட இயக்குனர் நாகராஜமுருகன், சி.இ.ஓ., இந்திராணி பார்வையிட்டனர்.