உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுப்பதிவு செய்வதில் தகராறு இரு தரப்பில் 9 பேர் மீது வழக்கு

ஓட்டுப்பதிவு செய்வதில் தகராறு இரு தரப்பில் 9 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, : குள்ளப்புரம் அருகே ஓட்டுப்பதிவு செய்வதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் அருகே கோவில்புரம் தெற்கு தெரு சவுந்தர் 57. இவரது மகன் முருகானந்தம் குள்ளப்புரத்திற்கு லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ய சென்றார். அப்போது மணிகண்டன், முருகானந்தத்தை அவதூறாக பேசி சட்டையை இழுத்து அடிக்கச் சென்றார். அருகில் இருந்தவர்கள் விலக்கினர். இதுகுறித்து சவுந்தர் கேட்டதற்கு, மணிகண்டன் அவதுாறாக பேசினார். ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்க சென்ற சவுந்தரையும், முருகானந்தத்தையும், மணிகண்டன், அவரது உறவினர் மனோஜ்குமார் ஆகிய இருவர் வழிமறித்து இரும்பு குழாய், தென்னை மட்டையால் தாக்கி காயப்படுத்தினர். பின் கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயமங்கலம் போலீசார் இப்பிரச்னையில் தொடர்புள்ள மணிகண்டன், மனோஜ்குமார், சிபிராஜ், கில்லை, பாப்பாத்தி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.பழனியப்பன் புகாரில், 'சுயேச்சை கட்சியின் சார்பாக ஓட்டுச்சாவடி அருகில் நின்று கொண்டிருந்தேன். ஓட்டு செலுத்துவதற்கு மதுபோதையில் வந்த முருகானந்தம், ரகளை செய்து அவதூறாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். நானும் எனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் சத்தமிட அங்கிருந்து சென்றார். எனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சந்திரலேகா, முத்தம்மாள் ஆகியோரை ஓட்டு செலுத்துவதற்கு எனது டூவீலரில் அழைத்துச் சென்ற போது சவுந்தர், அவரது மகன் முருகானந்தம், நண்பர்கள் ராஜேந்திரன், பாலா ஆகியோர் வழிமறித்தனர். இதனால் டூவீலரில் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். இதில் எனக்கும் சந்திரலேகா, முத்தம்மாள் ஆகியோருக்கும் காயங்கள் ஏற்பட்டன.' என தெரிவித்துள்ளார். இவரது புகாரில் சவுந்தர், முருகானந்தம், ராஜேந்திரன், பாலா ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை