உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி அருகே குப்பைக்கிடங்கு அகற்ற வழக்கு

கல்லுாரி அருகே குப்பைக்கிடங்கு அகற்ற வழக்கு

மதுரை: தேனி ராசிங்காபுரம் வழக்கறிஞர் மகேந்திரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தேனியில் அரசு சட்டக் கல்லுாரி உள்ளது. அதன் சுற்றுச்சுவர் அருகே தேனி நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அருகே கலைக் கல்லுாரி, ஐ.டி.ஐ., உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. குப்பைக் கிடங்கால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. அதிலிருந்து வெளியேறும் பூச்சிகள் கல்லுாரிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கலெக்டர், நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஆக.,19 க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை