உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் பரிசோதனை பகுப்பாய்வு மையம் தேனியில் அமைக்க வேண்டும் தொற்று நோய் பரவலை தடுக்க உதவும்

குடிநீர் பரிசோதனை பகுப்பாய்வு மையம் தேனியில் அமைக்க வேண்டும் தொற்று நோய் பரவலை தடுக்க உதவும்

கம்பம் : தேனியில் குடிநீர் பரிசோதனை பகுப்பாய்வு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.குடிநீர் மூலம் பல தொற்று நோய்கள் பரவுவதாக மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது உள்ளாட்சிகளின் கடமையாகும். உள்ளாட்சிகளில் வினியோகம் செய்யும் குடிநீரை ஆண்டிற்கு ஒரு முறை பகுப்பாய்வு மையமும், மாதந்தோறும் மேலோட்டமான பரிசோதனையும் செய்ய வேண்டும்.வைகை அணையில் உள்ள குடிநீர் வாரியத்தின் ஆய்வகத்தில் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து மாதந்தோறும் குடிநீர் பரிசோதனைக்கு தருகின்றனர். பரிசோதனை மேற்கொள்ளும் குடிநீர் பரிசோதனை பகுப்பாய்வு மையம் திருநெல்வேலியில் செயல்படுகிறது. 10 மாவட்டங்களுக்கு இந்த ஒரு மையம் மட்டுமே குடிநீர் பகுப்பாய்வு செய்து தருகிறது.சுகாதார துறையை சேர்ந்தவர்கள் கூறுகையில், குடிநீர் மூலம் தான் தொற்று நோய்கள் பரவுகிறது. தடுக்க வினியோகம் செய்யும் குடிநீரை பகுப்பாய்வு செய்ய வேண்டும். தொட்டி தண்ணீரை மட்டுமே வைகை அணையில் பரிசோதிக்கின்றனர். வினியோகிக்கப்படும் வீதிகள், பம்பிங் செய்யப்படும் இடம், தொட்டி, குழாய் உள்ளிட்ட பல இடங்களில் குடிநீரை சேகரம் செய்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். தேனி மாவட்டத்திற்கு மட்டும் அல்லது தேனி, திண்டுக்கல், மதுரையை இணைத்து தேனியில் குடிநீர் பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ