உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரம் விழுந்து சேதமடைந்த வீடு

மரம் விழுந்து சேதமடைந்த வீடு

மூணாறு, : மூணாறு அருகே போதமேடு முத்தன் முடியில் பலத்த காற்றில் மரம் சாய்ந்து வீடு சேதமடைந்தது.போதமேடு முத்தன்முடி பகுதியில் வசிப்பவர் ஹரிகரன். இவரது வீட்டின் அருகே ஆபத்தான நிலையில் மரம் இருந்தது. அதனை பாதுகாப்புக் கருதி வெட்டி அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தார். இருப்பினும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றில் எதிர்பாராத வகையில் மரம் சாய்ந்தது. அப்போது வீட்டினுள் இருந்த ஹரிகரன் சப்தம் கேட்டு வெளியில் ஓடியதால் உயிர் தப்பினார். வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. மரம் சாய்ந்தபோது ஹரிகரனின் மனைவி, மகள் ஆகியோர் வெளியில் சென்றதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை