உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீசாரை தள்ளிவிட்டு டூவீலரை திருடி சென்றவரை பிடிக்க தனிப்படை

போலீசாரை தள்ளிவிட்டு டூவீலரை திருடி சென்றவரை பிடிக்க தனிப்படை

தேவதானப்பட்டி: போலீஸ் சோதனை சாவடியில் டூவீலரில் நிற்காமல் சென்றவரை பிடித்த போலீஸ்காரரை கீழே தள்ளிவிட்டு டூவீலரை பறித்து சென்றவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தேவதானப்பட்டி அருகே டி. காமக்காப்பட்டியில் சோதனை சாவடியில் தேனி, திண்டுக்கல் மாவட்ட போலீசார்இணைந்து சோதனை நடத்துகின்றனர். ஜூலை 2 அதிகாலையில் ஏட்டுகள் நரேந்திர சிங் 41, செல்வராஜா, போலீஸ்காரர் கார்த்திக் ஆகியோர் டூவீலர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது (டி.என்.50 பி.ஒய் 1892) பதிவு எண் கொண்ட டூவீலரில் வந்தவர் சோதனை சாவடியில் நிற்காமல் கொடைக்கானல் ரோட்டில் வேகமாக சென்றார். அவரை பிடிக்க ஏட்டு நரேந்திர சிங் சோதனைக்காக நிறுத்தியிருந்த மதுரை காளிதாஸ்சின் டூவீலரையை (டி.ஏ.எல்.1760) எடுத்து சென்று மர்ம நபரை விரட்டி பிடித்தார். அவர் போலீஸ்காரர் நரேந்திர சிங்கை கீழே தள்ளி அவர் ஓட்டி வந்த டூவீலரிரை பறித்து மர்மநபர் தப்பினார்.மர்மநபர் முதலில் ஓட்டி சென்ற டூவீலர் திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் திருடுபோனதாக புகார் உள்ளது. மர்ம நபரிடம் போலீசார் பறிகொடுத்த டூவீலர் மதுரை சுற்றுலா பயணி காளிதாஸ் தனது டூவீலரை மீட்டு தர கோரியுள்ளார். ஒரு வாரத்தில் டூவீலர் ஒப்படைப்பதாக போலீசார் சமாதனாப்படுத்தினர். டூவீலரில் தப்பி சென்ற நபரை பிடிக்க எஸ்.ஐ., வேல் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகிறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை