மேலும் செய்திகள்
பள்ளி கலை விழா துவக்கம்
05-Nov-2025
தேனி : மகளிர் உரிமைத்தொகை பெற கலெக்டர் அலுவலகத்தில் ஆக., 17,19,20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்கிறது என 'வாட்ஸ் அப்' செயலியில் வதந்தி பரவியது.இதனை நம்பி போடி, பெரியகுளம், தேனி நகர்பகுதி, ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரிடம் முகாம் முகாம் எங்கு நடக்கிறது என கேட்டனர். இவர்களிடம் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடப்பதாக யாரோ தவறான தகவல் பரப்ப பட்டு வருகிறது. இதனை நம்ப வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மகளிர் உரிமை தொகை குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
05-Nov-2025