உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தக்காளியில் பூச்சியை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி வைக்கலாம்

தக்காளியில் பூச்சியை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி வைக்கலாம்

தேனி: தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளியில் ஊசித் துளைப்பான், இலை துளைக்கும் புழு, காய்த் துளைப்பான்களின் தாக்குதலை கட்டுப்படுத்திட துணை இயக்குனர் பிரபா ஆலோசனை தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் ஆண்டு தோறும் 1500 எக்டேரில் தக்காளி சாகுபடியாகிறது.தற்போது தக்காளியில் ஊசித் துளைப்பான், இலை துளைக்கும் புழு, காய்த் துளைப்பான் ஆகிய பூச்சிகள் தாக்குதல் காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த எக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். அசாடிராக்டின் ஒரு சதவீதம் மருந்தை ஒரு லிட்டரில் 3 மி.லி., என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீதம் எஸ்ஜி என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் வீதம் கலந்து பயன்படுத்தலாம். அதே போல் காய்த் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரைக்கோ கிராம் முல்லை ஒட்டுண்ணிகள் பூக்கும் பருவம் முதல் ஒரு வாரம் இடைவெளியில் எக்டேருக்கு ஒரு லட்சம் என்ற அளவில் விட வேண்டும். புழுபெண்டியமைடு 20 சதவீதம் டபுள்ய.ஜி என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.இந்த வழிமுறைகளை பின்பற்றி தக்காளியில் ஊசித் துளைப்பான், இலை துளைக்கும் புழு, காய்த் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை