உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

பெரியகுளம்:பெரியகுளம் - தேனி மெயின் ரோட்டில் சினிமா தியேட்டர் அருகே கனரா வங்கி ஏ.டி.எம்., உள்ளது. இதில், நேற்று முன்தினம் மே 2ல் விருதுநகர் மாவட்டம், என்.ஜி.ஓ., காலனி, கவிக்குயில் தெருவைச் சேர்ந்த மகேஷ்குமார், 34, என்பவர் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப சென்றார்.அப்போது, மே 1 இரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம்., மிஷினை பக்க வாட்டு பகுதியை ஆயுதத்தால் உடைத்து சேதப்படுத்தி பணம் கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது.இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு மகேஷ்குமார் தகவல் தந்தார். அவர்கள் வந்து பார்த்தபோது ஏ.டி.எம்., மிஷினில் பணம் இழப்பு ஏதும் இல்லை என தெரிந்தது.தென்கரை எஸ்.ஐ., கண்ணன் விசாரிக்கிறார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ