ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி பாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் மங்களஇசை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நிகழ்ச்சிகளுடன் முதல் யாகசாலை பூஜைகள், வேத பாராயணம், பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. 2ம் நாளில் இரண்டு, 3ம் கால யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் யந்த்ர நவரத்தின பஞ்சலோக ஸ்தாபனம், சுவாமிகள் பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகளும் மூன்றாம் நாளில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் ஷண்ணவதி ஹோமம், பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவர் பரிவார தெய்வங்களுக்கு பால், பழம், தயிர், தேன், குங்குமம், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.பி. தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ., மகாராஜன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் லோகிராஜன் உட்பட ஆண்டிபட்டி நகர் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி, நிர்வாக அறங்காவலர் பாலு காளியப்பன் உட்பட திருப்பணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.