உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தடை செய்யப்பட்ட காலாவதியான சாக்லேட்டுகள் பறிமுதல் பெற்றோர் கவனமுடன் இருக்க எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட காலாவதியான சாக்லேட்டுகள் பறிமுதல் பெற்றோர் கவனமுடன் இருக்க எச்சரிக்கை

தேனி : தேனியில் உணவுப்பாதுப்காப்புத்துறையினர் நடத்திய சோதனையில் காலாவதியான 4 கிலோ சாக்லேட், தடை செய்யப்பட்ட சிரஞ்சி சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.பள்ளி மாணவர்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இனிப்புகள், சாக்லேட்டுகள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அலுவலர்கள் மேற்கு சந்தை மற்றும் நகர்பகுதிகளில் மொத்த சாக்லேட் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர்.ஆய்வில் தடை செய்யப்பட்ட சிரஞ்சி, கண் வடிவ சாக்லேட்டுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. சோதனையில் ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான சாக்லேட்டுகள் 4 கிலோ சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனை செய்த 8 கடைகளுக்கு ரூ.8ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல சாக்லேட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடவில்லை. சிரஞ்சி சாக்லேட்டுகள் மஹாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. முடிவுகள் வந்த பின் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி கொடுக்கும் போது காலாவதி தேதி பார்த்து வாங்கி தர வேண்டும். காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனை செய்தால் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை