உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 மீது வழக்கு

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 மீது வழக்கு

தேவதானப்பட்டி : வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணின் கடையை அடித்து நொறுக்கி, வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகைகளை தூக்கிச் சென்ற 4 பேர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி உசையப்பா தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி 62. பெட்டிக்கடை நடத்தி வந்தார். தொழில் அபிவிருத்திக்காக, தேவதானப்பட்டியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் மூலம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த அவரது நண்பர் பால்பாண்டியிடம் ஆறு மாதத்திற்கு முன்பு ரூ.5 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.இந்நிலையில் மகேஸ்வரிக்கும், பால்பாண்டிக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரூ.1 லட்சத்தை மகேஸ்வரி, பால்பாண்டிக்கு கொடுத்துள்ளார். பாக்கி தொகை ரூ.4 லட்சத்தை விரைவில் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷாஜகான், பால்பாண்டி, இவரது நண்பர்கள் போஸ், ஜெகநாதன்ஆகியோர் மகேஸ்வரி கடைக்கு சென்று, மீதமுள்ள பணத்தை உடனே தருமாறு அவதூறாக பேசி கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மகேஸ்வரியை அவதூறாக பேசி அவமானம் செய்து, அருகேயுள்ள அவரின் வீட்டின் பீரோவை திறந்து 15 பவுன் தங்க நகை, வீட்டு பத்திரம் மற்றும் ரூ.50 ஆயிரத்தை எடுத்து சென்றனர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., தேவராஜ், ஷாஜகான், பால்பாண்டி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை