உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி ஆண்டிபட்டி சீனிவாசன் நகரை சேர்ந்த குமராண்டிமகள் திவ்யா 30, என்பவருக்கும் மதுரை புதுப்பட்டியை சேர்ந்த அமிர்தராஜ் 35, என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணத்தின் போது திவ்யாவிற்கு பெற்றோர் சார்பில் 57 பவுன் நகை மற்றும் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் கொடுத்துள்ளனர். அடுத்த ஆண்டில் வளைகாப்பு முடித்து திவ்யாவை பெற்றோர் வீட்டில் விட்டு சென்றவர்கள் மீண்டும் அவரை கணவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் திவ்யாவை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் திவ்யாவின் 20 பவுன் நகைகளை வைத்துக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றனர் என திவ்யா புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் கணவர் அமிர்தராஜ் மற்றும் உறவினர்கள் லதா, நல்லமுத்து, சுந்தரேசன், இலக்கியா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை