| ADDED : ஆக 17, 2024 01:17 AM
தேனி: பொதுமக்கள் குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என அரண்மனைப்புதுாரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களை வலியுறுத்தினார்.தேனி அரண்மனைப்புதுார் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பிச்சை தலைமை வகித்தார். பார்வையாளராக கலெக்டர் ஷஜீவனா பங்கேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப், வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, கலெக்டர் நேர்முக உதவியாளர் வளர்மதி, தாசில்தார் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொது மக்கள் பேசுகையில்,'ஊராட்சி ஆற்றங்கரையில் படித்துரை அமைக்க வேண்டும், போலீஸ் புறக்காவல் நிலையம், முல்லை நகரில் போதிய தெருவிளக்குகள் அமைக்கவும், வசந்தம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.கூட்டத்தில் ஊராட்சி துணைத்தலைவர் காசிராஜன், ஒன்றிய துணைத்தலைவர் முருகேசன், பி.டி.ஓ., சரவணக்குமார், ஊராட்சி செயலாளர் பாண்டி, ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.