உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி

தேனி, : பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் தவறிய மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் அரசுபள்ளிகளில் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் தோல்வியடைந்த, தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத சிறப்பு பயிற்சிகள் அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கற்போம் திட்டத்தின் கீழ் இப்பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி சனிக்கிழமை தோறும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு 10ம் வகுப்பு தவறியவர்கள், கடந்தாண்டு அரசுப்பள்ளியில் படித்து தோல்வியடைந்தவர்களும் பயிற்சியில் பங்கேற்று துணைத்தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர். துணைத்தேர்வுகளுக்கு ஜூன் 1க்குள் விண்ணபிக்க வேண்டும். அரசுப்பள்ளியில் படித்து தோல்வியடைந்த 795 மாணவர்களில் 407 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். பிளஸ் 1, 2 மாணவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் துணைத்தேர்விற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களை கண்டறிந்து பயிற்சி வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை