உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா சாகுபடியாளர்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை

மா சாகுபடியாளர்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை

கம்பம் : மா சாகுபடி பாதித்துள்ளதால் விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெறுகிறது. பெரும்பாலும் மானாவாரி பயிராக மா சாகுபடி நடைபெறுகிறது. டிசம்பர், ஜனவரியில் பூ பூக்கும். ஏப்ரல் அறுவடை துவங்கி ஜூன் வரை நடைபெறும். ஆனால் இந்தாண்டு பூ பூக்கவே இல்லை. இதனால் மகசூல் 80 சதவீதம் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம் வட்டாரங்களில் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. வருவாய் இழப்பு மட்டுமல்லாது, ஒவ்வொரு விவசாயிக்கும் பூச்சி மருந்து தெளித்த வகையிலும் செலவுகள் ஆகி உள்ளது.இது தொடர்பாக மா சாகுபடியாளர்கள் கூறுகையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் முழுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டது. மா விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர, அரசு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளில் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம், மா சாகுபடியாளர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்க வேண்டும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை