உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்னமனுார் அரச மரம் அகற்றும் விவகாரத்தில் சர்ச்சை

சின்னமனுார் அரச மரம் அகற்றும் விவகாரத்தில் சர்ச்சை

சின்னமனுார், : சின்னமனுார் நகராட்சியில் ரூ.3 கோடியே 65 லட்சத்தில் கட்டப்படும் வணிக வளாகத்திற்கு அருகில் உள்ள அரச மரத்தை அகற்றுவதில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.இந்நகராட்சியில் 54 கடைகளுடன் செயல்பட்டு வந்த வணிக வளாகத்தை, 74 கடைகளுடன் புதிய வணிக வளாகமாக மாற்றுவதற்கு ரூ.3 கோடியே 65 லட்சத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வணிக வளாகம் அருகில் உள்ள பழமையான அரச மரத்தை அகற்ற நகராட்சி முடிவு செய்தது. முன்னதாக முறைப்படி மரத்தை அகற்ற உத்தமபாளையம் ஆர்.டி.ஒ., தாட்சாயிணியிடம் நகராட்சியின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பசுமை தீர்ப்பாயத்திலும் மனு செய்து, மரத்தை அகற்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் மரத்தை அகற்ற ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது. பின் தன்னார்வலர் அமைப்பு ஒன்று மரத்தை அப்படியே எடுத்து, வேறு இடத்தில் நட அனுமதி கேட்டது. நகராட்சியும் அனுமதி தந்தது.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வணிக வளாகம் கட்ட மரம் இடையூறாக உள்ளது. மரத்தை அகற்ற பசுமை தீர்ப்பாயத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. அருகில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் இந்த மரத்தின் வேர்கள் ஊடுருவி உள்ளன. மரத்தை பெயர்த்து வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறோம் என கேட்டுள்ளனர். நாங்களும் சரி என்று கூறி உள்ளோம்.', என்றனர்.

தேனி எம்.பி., ஆய்வு

இதற்கிடையே நேற்று காலை அரசமரத்தை பார்வையிட்ட எம்.பி., தங்க தமிழ் செல்வன் ஆய்வுக்கு பின் கூறியதாவது: 'பழமையான மரம் என்பதால் வெட்டாமல் கட்டடம் கட்ட அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். இம்மரத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு அதிகளவில் ஆக்சிஜன் கிடைக்கும் என்பதால் மரத்தை சுற்றிலும் பொது மக்கள் அமர திட்டு கட்டிவிட்டால் பயனடைவர். நகராட்சி அதிகாரிகளிடமும் நான் கூறியுள்ளேன். அவர்களும் ஏற்றுக் கொண்டனர்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி