உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பதவி உயர்வு வழங்கிய பின் நேரடி நியமனம் செய்ய வலியுறுத்தல் கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயற்குழு தீர்மானம்

பதவி உயர்வு வழங்கிய பின் நேரடி நியமனம் செய்ய வலியுறுத்தல் கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயற்குழு தீர்மானம்

கம்பம்: 'பதவி உயர்வு வழங்கிய பின் இளநிலை உதவியாளர்களை நேரடி நியமனம் செய்ய வேண்டும்', என மாநில கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சுருளி அருவியில் தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பழனியம்மாள் தலைமையில் நடந்தது.மாவட்ட தலைவர் விஷ்வன் வரவேற்றார். வேலை அறிக்கையை மாநில செயலாளர் நவநீத கிருஷ்ணன்,அஞ்சலி தீர்மானங்களை மாநில துணை தலைவர் ராமகிருஷ்ணன் வாசித்தனர். மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் சமர்ப்பித்தார். கூட்டத்தில், கூட்டுறவு தணிக்கை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை உடனே விடுவிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள், பதிவுரு எழுத்தர்கள், சுருக்கெழுத்தர், தட்டச்சர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கி விட்டு அதன் பின் இளநிலை உதவியாளர்களை நேரடி நியமனம் செய்ய வேண்டும். இணைப்பதிவாளர், துணை பதிவாளர்களுக்கு - போதிய வாகன வசதி இல்லாத்தால் ஆய்வு பணிகள் தொய்வாக உள்ளதை தவிர்க்க வாகன வசதி செய்து தர வேண்டும், கூட்டுறவு துறைக்கு தேர்தல் நடத்த தனி பிரிவு நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும், பணி ஓய்வு பெறும் ஒரு மாதத்திற்கு முன்பு ' அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு எழும் என்ற எதிர்பார்ப்பதால், பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற நடைமுறையை ரத்து செய்யவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி